அமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்
                  
                     18 Jul,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
	196 கிலோ எடை கொண்ட இந்த விமானம் 15 நிமிடத்தில் புறப்படத் தயாராகும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தண்ணீரில் மிதக்கும் வகையிலும், அவசர காலத்தில் உயிர் பிழைக்க பாராசூட் உதவியுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அறுங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இலகு ரக விமானம் அரசு அனுமதியோடு டெக்சாஸ் மாகாணத்தில் சோதித்து பார்க்கப்பட்டது.
	சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்துள்ள ‘லிப்ட்’ நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருவதாக கூறியது.
	மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .