ஒரு மணிநேரம் முடங்கிய டுவிட்டர்
14 Jul,2019
சமூக வலைத்தளங்களில் முக்கியதொன்றாக கருதப்படும் டுவிட்டர் நேற்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலக முழுவதும் பெரும்பான்மையானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக டுவிட்டர் வலைத்தளம் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று டுவிட்டர் வலைத்தளம் திடீரென முடங்கியது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் டுவிட்டர் சேவை முடங்கியது.
இதனால், டுவிட்டர் பயனாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர் இது குறித்து விளக்கமளித்த டுவிட்டர், தொழில்நுட்ப காரணங்களால் வலைபக்கம் முடங்கியதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியது. அதேபோல், சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.
அதேவேளை, ட்விட்டர் வலைதளம் முடங்கிய அதேநேரத்தில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைலமையில் சமூகவலைத்தள உச்சிமாநாடு ஒன்று இடம்பெற்றது. இம்மாநாட்டிற்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை .
கடந்த ஜூலை 3ம் திகதி பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக்,வட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியமை குறிப்பிடத்தக்கது.