பிளாஸ்டிக்கிலிருந்து பெற்றோல்
27 Jun,2019
இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (43). பொறியியலாளரான இவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம், பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் என உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து சதீஷ்குமார் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும் பெற்றோலாகவும் மாற்ற முடியும்.
இது, மிக எளிமையான செயல்முறை. இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை. இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது. அதே போல், வெக்யூமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்று மாசுபடாது.
2016ம் ஆண்டிலிருந்து 2019 வரை 50 தொன் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றியுள்ளேன். தற்போது எங்கள் நிறுவனம், 200 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் வரை உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது” என்றார்.