பேஸ்புக் அறிமுகம் செய்யும் லிப்ரா டிஜிட்டல் பணம் ?
                  
                     21 Jun,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	
	சமூக வலைத்தளமான பேஸ்புக் லிப்ரா என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளது.
	 
	லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும் என தெரிவித்துள்ளது.
	 
	ஒரு ஸ்மார்ட் ஃபோனும் அதில் இணைய வசதியும் இருந்தால் போதும் பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வது மிகவும் எளிமை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
	 
	உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள, செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது.
	 
	மேலும், இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.