காற்றில்லாத சக்கரம் தயாராகிறது!
13 Jun,2019
பிரபல டயர் நிறுவனமான மிச்செலின், ஜெனரல் மோட்டார்சி,ன் 'செவர்லே போல்ட்' என்ற மின்சார காருக்கு, புதிய வகை சக்கரங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சக்கரத்திற்குள், டியூப் கிடையாது. எனவே, அதில் காற்றை அடைக்கும் தேவையும் இல்லை. பிறகு?
வழக்கமான சக்கரத்திற்கு பயன்படும் ரப்பரில் தயாராகும் இந்த டயருக்கு, 'அப்டிஸ்' என்று மிச்செலின் பெயரிட்டுள்ளது. ' யுனீக் பங்க்சர்லெஸ் டயர் சிஸ்டம்' என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கம்தான் 'அப்டிஸ்'. ஆனால், ரப்பரின் பயன்பாடு இதில் குறைவு. தவிர, வண்டி ஒடும்போதே டயர் வெடிக்கும் ஆபத்து இருக்காது.
வண்டிகளில் ஸ்டெப்னி மாட்டத் தேவையில்லை என்பதால், வாகனத்தின் எடையும் சில கிலோக்கள் குறையும். ஜெனரல் மோட்டார்சே இதை வண்டிகளில், பொருத்தவிருப்பதால், நிச்சயம், அப்டிஸ் டயர்களுக்கு வரவேற்பு பெருகும் என, எதிர்பார்க்கலாம்