டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன ரக துப்பாக்கி : ருசிகர தகவல்
13 Jun,2019
உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் வகையில் ஆஸ்திரேலிய இராணுவம் புதிய துப்பாக்கியினை உருவாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுகளை பயன்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட இடங்களை படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது என டிரோன்களின் பயன்பாடு தவறான வழிக்கு மாற்றப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தவே இந்த கதிர்வீச்சு துப்பாக்கிகள் ஆஸ்திரேலிய இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி மூலம் 10 ஆயிரம் அடி தூரத்தில் வரும் டிரோனையும் குறிப்பார்த்து, பின்னர் அதன் மீது துப்பாக்கி மூலம் ஒளிக்கற்றையை செலுத்த முடியும்.
இந்த ஒளிக்கற்றைகள் அனுப்பப்பட்டவுடன் அந்த டிரோன் செயலிழந்து கீழே விழுந்து விடும். டிரோன்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆஸ்திரேலியாவில் அதிகமாவதால் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த நவீன ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.