கூகுள் , ஆப்பிள் ’நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய நிறுவனம் !
                  
                     12 Jun,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	வருடா வருடம் உலகில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்ட் எது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்படுவதுண்டு. அதில் கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் டெக்னாலஜியை சேர்ந்த நிறுவனங்களே முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும்.
	அதுமட்டுமன்றி கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிள்  மற்றும் கூகுளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் இரு நிறுவனங்களும் மாறி மாறி முதலிடம் பிடித்தன.
	 
	இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பிராண்டாக அமேசான் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
	 
	அதேசமயம் ஆப்பிள் 2வது இடத்தையும், கூகுள் நிறுவனம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
	 
	மேலும்  அமேசான் நிறுவனத்தின்இந்த ஆண்டின்  மொத்த மதிப்பானது 315.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 108 பில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
	 
	இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தில் மொத்த மதிப்பு 309. 5 பில்லியன் ஆகும். அதன் போட்டி நிறுவனமான கூகுளின் மொத்த மதிப்பு   309 பில்லியன் ஆகும். இதனால் அடித்த ஆண்டு முதலிடம் பிடிக்க இருநிறுவனங்களும் மிகவும் போட்டிபோட்டு வருகின்றன.