பறக்கும் ரோபோ பூச்சிக்கள்
                  
                     05 Jun,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	உலகெங்கும் சிறிய முதல் மிக பெரிய வரையில் பல வகையான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
	அந்தவகையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் பறக்கக் கூடிய ரோபோ பூச்சிகளை உருவாக்கியுள்ளனர்.
	லேசர் மூலம் இயங்கும் இந்த பூச்சிகளின் உடலில் ஒரு போட்டோ வோல்டிக் செல் பொருத்தப்பட்டுள்ளது. ஏழு வோல்ட் மின்சாரம் மட்டுமே தயாரிக்ககூடிய இந்த செல் தான் ரோபோ பூச்சிகளை பறக்க வைக்கிறது. தேவைப்பட்டால் 240 வோல்ட்கள் வரை இதன் திறனை அதிகரிக்க முடியும் என்கிறனர். ஒரு மிகச் சிறிய மைக்ரோ கண்ட்ரோலர் இந்த பூச்சிகளின்  மூளையாக செயற்படுகிறது.
	இதன் மூலம் பறக்க வேண்டிய தூரம் மற்றும் உயரம் ஆகியவை கட்டுப்படுத்தப்டுகின்றன. மனிதர்கள் மற்றும் ட்ரோன்கள் நுழைய முடியாத சிறிய இடங்களை ஆய்வு செய்ய இவ்வகை ரோபோ பூச்சிகள் உபயோகப்படும்.
	இன்னும் பல விதங்களில் இவைகளை பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் இதை உருவாக்கியவர்கள்