நிலவில் பயணிக்க  கார்
                  
                     05 Jun,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	விண்வெளியில் இலகுவாக பணிப்பதற்காக ஜப்பானின் கார் நிறுவனம் ஒன்று புதிய வகைரோவர் கார் ஒன்றை வடிவமைத்துள்ளது.
	ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான (JAXA) மற்றும் ஜப்பான் கார் தாயரிப்பு நிறுவனமான  டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்களும் ர்ந்து நிலவில் பயணிக்கும் வகையில் புதிய ரோவர் வகை கார் ஒன்றை உறுவாக திட்டமிட்டுள்ளது.
	இந்நிலையில் இதுதொடர்பாக  JAXA  மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் ஒன;று கையெழுத்தாகியுள்ளது.
	குறித்த வாகனம் 2 பேர் பயணிக்கும் வகையில் இருக்குமெனவும், அதே வேளை  அவசர காலங்களில் 4 பேர் வரை பயணிக்கும் வகையிலும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	இந்த வாகனம், 6 மீட்டர் நீளம், 5.2 மீட்டர் அகலம் மற்றும் 3.8 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
	முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் வகையில் இந்த வாகனம் இருப்பதாகவும், இந்த வாகனம் தொடர்ந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியதாக உறுவாக்கப்படவுள்ளது.
	இந்நிலையில் குறித்த கார் 2029 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.