ஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த பள்ளி மாணவன்
                  
                     29 May,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும் ஆப்பிள் செயல்திறனை அதிகம் விரும்பியும், பலரும் இதனை வாங்குவதை லட்சியமாகவும் கொண்டிருக்கின்றனர்.
	மேலும் இந்நிறுவனம் ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருட்களையும் உருவாக்குகிறது.
	பாதுகாப்பிலும் மற்ற ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்டுகளைவிட அதிக நம்பகத்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஹேக் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
	இந்த ஹேக்கிங் சம்பவத்தில் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு அந்த மாணவர் ஈடுப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
	கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த மாணவரின் வக்கீல் கூறுகையில், ‘ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும் என நம்பியுள்ளான். மேலும் ஹேக்கிங் செய்தால் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரியாமல் தவறு செய்துள்ளார்’ என வாதாடினார்.
	இதையடுத்து அந்த மாணவருக்கு ரூ.35000 அபராத தொகை செலுத்த உத்தரவிட்டு, மாணவரின் 9 மாத கால நன்னடத்தை சான்றிதழை போலீசார் வழங்குமாறும் கோர்ட் உத்தரவிட்டது.