டிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்
21 Apr,2019
நீங்கள் சினிமா பாடல்களுக்கு வாயசைக்கலாம் அல்லது ஏதேனும் வசனங்களுக்கு உங்கள் கற்பனையில் நீங்கள் நடிக்கலாம். உங்களின் சொந்த குரலை நீங்கள் பயன்படுத்த முடியாது.
உங்கள் குரலை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோக்கிறீர்களா? - ஒரு முறை டிக் டாக்கை பயன்படுத்தி பாருங்கள். என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தெரியும். இப்போது அதற்கு வாய்பில்லை. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிரிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது.
டிக் டாக் செயலி
சொந்தமாக காணொளிகளை தயாரிப்பது மட்டுமல்லாமல் டிக் டாக் செயலியில் இருக்கு பிற நபர் செய்யும் வினோதமான, நகைச்சுவையான காணொளிகளையும் நீங்கள் பார்க்கலாம்
அந்த காணொளிகளை நீங்கள் பிற சமூக வலைதளங்களிலும் காணலாம் நீங்கள் அதற்காக தனியாக கணக்கு தொடங்க தேவையில்லை.
எப்போது உருவாக்கப்பட்டது?
2016ஆம் ஆண்டு இந்த டிக் டாக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை vaishnavi_rajasekaran Image caption டிக் டாக் மூலம் பிரபலமான வைஷ்ணவி ராஜசேகர்
ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதல் இடத்தில் உள்ளது.
இது வரை 100 கோடி பேர் இந்த டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். சீனாவில் இந்த டிக் டாக் டூயூன் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரபலமாக உள்ளது.
மேலும் டிக் டாக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்.
இந்த டிக் டாக் செயலி பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி.
போட்டியில் ஃபேஸ்புக்
டிக் டாக் செயலிக்கு போட்டியாக லாசோ என்ற செயலி ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது. அது தற்போது அமெரிக்காவில் மட்டும் உள்ளது.
தற்போது என்ன பிரச்சனை?
தற்போது டிக் டாக் குறித்த சர்ச்சையை பார்ப்போம்.
இந்த டிக் டாக் செயலியில் பல ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகளும் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
தமிழ்நாட்டிலும் இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறிவந்தன.
இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
இம்மாதிரியான பல எதிர்ப்புகளுக்கு பிறகு டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அந்த தடையை எதிர்த்து டிக் டாக் தரப்பில் உச்ச நிதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அந்த செயலி நீக்கப்பட்டுள்ளது.
வங்க தேசத்தில் தடை
குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதற்கு இது வித்திடலாம் என்பதால் இந்த செயலில் முதலில் இந்தோனீசியாவிலும் தடை செய்யப்பட்டிருந்தது.
அதன் பிறகு இது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று டிக் டாக் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்த தடை நீக்கப்பட்டது.
இதற்கு வங்கதேசத்திலும் தடை உள்ளது. 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை இது மீறுவதால் இந்த செயலிக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது
தற்போது அங்கு குழந்தைகளுக்கென் தனியான ஒரு டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியும்.
என்ன சொல்கிறது டிக் டாக்?
நாங்கள் சமூக ஊடகம் தொடர்பான இந்திய சட்ட திட்டங்களை மதிக்கிறோம். தொடர்ந்து கண்காணிப்பு நடைமுறைகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய பயானாளிகளை உருவாக்கிய 60 லட்சம் காணொளிகளை நாங்கள் நீக்கி உள்ளோம் என்று சொல்கிறது டிக் டாக் நிறுவனம்.
சென்னை உயர்நீதிமன்ற வழிக்காட்டலை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள டிக் டாக் நிறுவனம், வழக்கறிஞர் அரவிந்த் ததாரை சுயாதீன வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இந்திய நீதித் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, என்று கூறியது