ஒரு கைபேசிக்கு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்!
                  
                     21 Apr,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனை திரும்ப அளித்து விட்டு, தனது பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளருக்கு மேலும் 10 ஸ்மார்ட் போன்களை அனுப்பி கூகுள் நிறுவனம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த சீட்டோஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் சில கோளாறுகள் இருந்ததாக கருதிய அவர், அந்த ஸ்மார்ட் போனை திரும்ப அளித்துவிட்டு அதற்காக தான் செலவிட்ட 900 டாலர்களை திரும்ப செலுத்துமாறு வாடிக்கையாளர் சேவை மையத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.
	இந்நிலையில் அவருக்கு 900 டாலர்களுக்கு பதிலாக வெறும் 80 டாலர்களை மட்டுமே திரும்ப வழங்கியுள்ள கூகுள் நிறுவனம், மேலும் அதே ரக 10 ஸ்மார்ட் போன்களை அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இதுகுறித்து அமெரிக்காவின் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். மேலும் 9000 டாலர் மதிப்புடைய இந்த 10 ஸ்மார்ட் போன்களை எடுத்துக் கொண்டு, தனது 900 டாலர்களை மட்டுமே திருப்பி கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.