4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?
05 Mar,2019
நமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ? இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா ? அல்லது வேறு ஏதாவது தொழிநுட்ப சாதனங்களில் பயன் படுத்த முடியுமா ? என்ற நிறைய கேள்விகள்
எல்லாருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த 5G தொழிநுட்பம்
என்ன என்பதை பற்றி காண்போம்.
5G என்றல் என்ன ?
( 5th Generation Of Internet ) என்பது தான் இதன் விரிவாக்கம் . 5G என்று சொன்னவுடன் நம் மனதில் தோன்றுவது அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தான். 5G யின் வேகம் 10 Gbps அப்போது இதன் வேகம் எவ்வளவு இருக்கும் நீங்கள் எவ்வளவு வேகமாக தகவல் மற்றும் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்று நினைத்து பாருங்கள் . இதன் வேகம் உண்மையிலேயே அதிகம் தான்.
4G மற்றும் 5G யின் வித்தியாசம் என்ன ?
4G மற்றும் 5G தொழிநுட்பத்தின் என்ன வித்தியாசம் என்பதை அடிப்படையில் இருந்து பார்ப்போம்.
1G சேவை :
முதன் முதலில் வர்த்தக ரீதியாக பயன்படுத்த பட்ட மொபைல் சேவை தான் 1G . இந்த சேவையை பயன்படுத்தி அலைபேசியின் மூலம் ஒருவர் மாற்றுவருடன் பேசி கொள்ள மட்டுமே முடியும்.
2G சேவை :
முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியை இந்த சேவையில் தான் கொண்டுவரப்பட்டன ஒருவர் மற்றொவருடன் போனில் பேசமுடியும். குறுந்செய்திகள்( SMS ) மற்றும் காணொளிகளை ( MMS ) அனுப்பும் வசதியும் கொண்டு வரப்பட்டது இந்த சேவையில் தான்.
3G சேவை :
இந்த சேவையில் தான் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின இதன் காரணமாக சிக்னல்களை சிறிய பாக்கெட்களாக பிரித்து அனுப்பும் பாக்கெட் ஸ்விட்சிங் முறை கொண்டு வரப்பட்ட்டன. இவை 3G சேவை தான் ஒயர் இல்லாமல் வேகமான இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ், ஐ.பி.எஸ் வசதி போன்றவை இந்த 3G சேவை தான் சாத்தியமாகின.
4G சேவை :
3G விடவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்த 4G சேவை கொண்டு வரப்பட்டது அதிவேக இன்டர்நெட் வசதி ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வரை 4G சேவையை பயன்படுத்த முடியும் , வீடியோ கால் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ,மொபைல் டிவி என இன்டர்நெட் உலகையே மாத்தியமைத்தது தான் 4G.
5G சேவை :
4G விட நுறு மடங்கு டேட்டாக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தை 3G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 26 மணி நேரம் ஆகும் 4G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 6 நிமிடத்தில் டவுன்லோட் செய்ய முடியும் ஆனால் 5G யில் 3.6 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும்
இந்த சேவையானது நமது அன்றட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து கேஜெட்களிலும் 5G சேவையை பயன்படுத்தும் வகையில் இருக்கும் . அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் தான் சேமித்து வைத்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.
5G சேவையின் நிறைகள் :
அதிவேகமாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் , அனைத்து கேஜெட்களிலும் பயன்படுத்தும் வைகையில் இருக்கும்.
எதிர்காலத்தில் புதிதாக நிறைய தொழில்நுட்ப கருவிகளை உருவாக்க மற்றும் அதிவேகமாக பயன்படுத்த முடியும்.
குறைகள் :
ஒரு 4G மொபைல் போனை பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால் 5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் . நன்றி