வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன ?
16 Jan,2019
ஐ.ஓ.எஸ்ஸில் இயங்கும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டைப் பெற்றுள்ளது. அந்த அப்டேட்டின் படி, க்ரூப் சாட்டில் உங்களின் நண்பர்களுக்கு ப்ரைவேட் ரிப்ளே அனுப்பிக் கொள்ளலாம். 2.19.11 என்ற வெர்சனில் வெளியாகி இருக்கும் புது அப்டேட்டின் படி, நீங்கள் க்ரூப் சாட் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது குறுஞ்செய்திக்கு தனியாக பதில் அனுப்ப விரும்பினால், ப்ரைவேட் சாட் மூலமாக தனியாக பதில் அனுப்பிக் கொள்ளலாம்.
உங்களின் நண்பர்கள் யாராவது அனுப்பியிருக்கும் மெசேஜ்ஜுக்கு பதில் அனுப்ப விரும்பினால், அந்த மெசேஜ்ஜை லாங் பிரஸ் செய்யுங்கள். லாங் பிரஸ் செய்தால் அதில் பாப் அப் மெனு உருவாகும். அதில், மோர் ஆப்சனில் நீங்கள் ரிப்ளே ப்ரைவேட்லி என்ற ஆப்சனை தேர்வு செய்து அந்த மெசேஜ்ஜிற்கான தனிப்பட்ட கருத்தினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
WhatsApp private reply update : போட்டோக்கள் மற்றும் வீடியோக்களில் எடிட் செய்து கொள்ளும் வசதி
நீங்கள் உங்களின் நண்பர்களுக்கு வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்பும் போது எடிட் செய்து ஸ்டிக்கர்கள் இணைத்து எடிட் செய்து கொள்ளும் வசதிகளும் தற்போதைய அப்டேட்டில் வெளியாக உள்ளது. அதே போல் அந்த ஸ்டிக்கர்களை ரிமூவ் செய்து கொள்ளும் வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்த அப்டேட்.