வாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி?
02 Jan,2019
வாட்ஸ்அப்-ல் உங்களை ஒருவர் ப்ளாக் செய்துவிட்டால் அவர்களுடன் நீங்கள் ’சாட்’ செய்து பேச முடியாமல் போகும். ஆனால், வாட்ஸ்அப்-ல் இதற்கு ஒரு மாற்று வழியும் இருக்கிறது.
வாட்ஸ்அப்-ல் பாதுகாப்பு அம்சங்கள் பல உள்ளன. உங்களுக்கு வேண்டாதவரை ப்ளாக் செய்யலாம், உங்களது பெர்சனல் தகவல்களைக் காணவிடாமல் செய்யலாம், ஸ்டேட்டஸ், ப்ரொஃபைல் இமேஜ் ஆகியவற்றை குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் பார்க்காதவாறு செய்யலாம் எனப் பல அம்சங்கள் உள்ளன.
இதில், உங்களை ஒருவர் ப்ளாக் செய்துவிட்டால் அந்நபருடன் மீண்டும் ‘சாட்’ செய்வதற்கு ட்ரிக்ஸ் இருக்கிறது. அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம்:
முதலில், நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டால், நீங்களாகவே அந்த ப்ளாக் லிஸ்டில் இருந்து வெளியேறவே முடியாது. ஆனால், உங்களை ப்ளாக் செய்தவரும் நீங்களும் ஒரு க்ரூப் சாட்-ல் இருந்தால் அதன் மூலமாக நீங்கள் பழையபடி உங்கள் உரையாடல்களைத் தொடரலாம்.
அல்லது, நீங்களாகவே ஒரு க்ரூப் ஆரம்பித்து உங்களை ப்ளாக் செய்தவரையும் ஒரு மூன்றாவது நண்பர் மூலம் இணைத்து சாட் செய்யலாம். ஆனால், உங்களுடன் எந்த க்ரூப்-லும் இல்லாத ஒரு நண்பர் உங்களை ‘ப்ளாக்’ செய்தால் வேறு இல்லை.
நீங்கள் காலத்துக்கும் ‘ப்ளாக்’ லிஸ்ட் தான். அதேபோல், உங்களை ப்ளாக் செய்த நண்பர் நீங்கள் இருக்கும் க்ரூப்களில் இருந்து வெளியேறிவிட்டாலும் நீங்கள் நிரந்தர ப்ளாக் லிஸ்ட் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
உதாரணத்துக்கு..A – நீங்கள்
B – உங்களை பிளாக் செய்தவர்
C – உங்கள் இருவருக்குமான பொதுவான நண்பர்
A ஆகிய நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி C ஐ சேர்த்து கொள்ளுங்கள். C ஐ குரூப் அட்மின் ஆக்குங்கள். பின்னர் அவரிடம் Bயின் எண்ணை கொடுத்து குரூப்பில் சேர்த்து விட சொல்லுங்கள். சேர்த்ததும் C ஐ குரூப்பில் இருந்து விலகிட சொல்லுங்கள்.. இப்போது யாருமற்ற குரூப்பில் Aவும், Bயும் பேசிக்கொள்ளலாம்ஸ