வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode
                  
                     17 Dec,2018
                  
                  
                      
					  
                     
						
	 
	Whatsapp Picture-in-Picture Mode : பிக்சர் – இன் – பிக்சர் (Picture-in-Picture (PiP) mode) மோட் என்ற டெக்னாலஜியை ஏற்கனவே நீங்கள் முகநூல் போன்ற செயலிகளின் பார்த்திருப்பீர்கள்.  நியூஸ் ஃபீடில் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டே, மற்ற செய்திகளை நீங்கள் ஸ்க்ரோல் செய்யலாம். ஒரு வீடியோவை பார்ப்பதற்காக நீங்கள் யூட்யூபோ, மற்ற வலை தளங்களுக்கோ வர வேண்டாம். நேரடியாக நியூஸ் ஃபீடிலேயே கண்டு களிக்கலாம்.
	அதே போன்ற புதிய வசதியினை உருவாகியிருக்கிறது வாட்ஸ்ஆப் செயலி. ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் ஏற்கனவே இந்த சிறப்பம்சங்கள் கொண்டு வரப்பட்டுவிட்டன.
	Whatsapp Picture-in-Picture Mode எப்படி செயல்படும் ?
	ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு தற்போது தான் இந்த அப்டேட் வந்துள்ளது. வீடியோவிற்கான லிங்க் ஒன்றினை நேரடியாக ஃபேஸ்புக், டம்ப்ளர், இன்ஸ்டாகிராம், அல்லது யூட்யூப் வலைதளங்களில் இருந்து லிங்கினை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தால், வாட்ஸ்ஆப்பில் தம்ப்நைல் அளவில் வீடியோ கார்ட் ஒன்றும், அந்த லிங்கின் நேட்டிவ் சோர்ஸ்சும் தெரியும்.
	அதனை க்ளிக் செய்தால் வீடியோ ஆட்டோமேட்டிக்காக ஓடத் துவங்கிவிடும். நீங்கள் அந்த வீடியோவினை காண்பதற்காக குறிப்பிட்ட வலைதளங்களுக்குள் செல்ல வேண்டாம். உங்களின் டேட்டா மற்றும் நேரம் இரண்டும் இதனால் மிச்சமாகும்.
	Whatsapp Picture-in-Picture Mode அப்டேட்டினை எப்படி பெறுவது ?
	தம்ப்நைல் அளவில் வரும் மெசேஜ்ஜினை க்ளிக் செய்தால் தானாக அந்த வீடியோ ப்ளே ஆகத் தொடங்கும். ஃபுல் ஸ்கிரீனில் பார்க்க விரும்பினால் அப்படியே பார்த்துக் கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் WhatsApp version 2.18.380 இந்த அப்டேட்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது உங்களின் வாட்ஸ்ஆப் செயலியை நீங்கள் அப்டேட் செய்தாலும் இந்த அப்டேட்டினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.