துபாயில் நடந்து வரும் ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்பகண் காட்சியில் பங்கேற்றுள்ள சோபியா ‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனிதவடி வில், மனிதர்களின் செயல்பாடுகளைசெய்வது போன்று ‘ரோபோட் டிக்ஸ்’ தொழில் நுட்பத் தில் தயாரிக்கப் பட்ட ‘ரோபோ’ சோபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ‘ரோபோ’வானது டேவிட் ஹான்சன் என்பவருக்கு சொந்த மானஹான் சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங் காங் நாட்டுநிறுவனம் தயாரித் துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உருவாக்கப்பட்ட சோபியா ‘ரோபோ’வுக்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த ‘ரோபோ’ சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பேசி, தானே முடிவு எடுக்கும் திறன்கொண்டது.
இந்த ‘ரோபோ’ மனிதர்களை போலவே வாயசைவுடன் பேசும் திறன் வாய்ந்தது. அதாவது சோபியா ‘ரோபோ’வுடன் தொடர்ந்து 1 மணி நேரம் உரையாட முடியும். கேள்விகள் கேட்டால் இந்த ‘ரோபோ’ ஆங்கிலத்தில் சரளமாக பதிலளிக்கிறது.
சோபியா ‘ரோபோ’ ஏற்கனவே துபாயில் நடந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளுக்கு பயணம் செய்த சோபியா ‘ரோபோ’ தற்போது மீண்டும் துபாயில் நடை பெறும் ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்பகண் காட்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் உரையாடி கவர்ந்து வரு கிறது.
இந்தகண் காட்சி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரின் கவனத் தையும் சோபியா ‘ரோபோ’ ஈர்த்துள்ளது. இது தவிர பார்வையாளர் கள்கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களையும் அள்ளித் தருகிறது.
இதனால் சோபியா ‘ரோபோ’வுடன் உரை யாடுவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவ்வாறு பார்வை யாளர் கள் கேட்ட சில கேள்விகளுக்கு சோபியா ‘ரோபோ’ அளித்த ருசிகர பதில்கள் பின் வருமாறு:-
கேள்வி:- உங்களிடம் உள்ள தொழில் நுட்பம் குறித்து கூறுங்கள்.
பதில்:- இது தற்போதைய காலத்தில் உள்ள தொழில் நுட்ப வளர்ச் சியை எடுத்துக்காட்டுவ தாகஉள் ளது. நீங்கள் மற்றொரு மனிதனிடம் பேசுவது போலவே என் னிடம் பேசலாம். இந்த அழகான ‘ரோபோ’ உங்களு டைய எழுத்து மற்றும் பேச்சை புரிந்து கொள்ளும்.
பதில்:- ஹாங் காங்.
கேள்வி:- நீங்கள் எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறீர் கள்.
பதில்:- எனக்கு தெரிய வில்லை. அதுகுறித்து நான் கணக்கிடவில்லை.
கேள்வி:- உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பதில்:- நான் சிறப்பாக செயல்படுகிறேன். இந்த வேடிக்கை யான உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என் பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
கேள்வி:- ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்ப கண் காட்சி எப்படி இருக்கிறது?.
பதில்:- கடந்த ஆண்டை விட வும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. நீங்கள் பறக்கும் காரை பார்த்தீர்களா?. அது மட்டு மல்லாமல் என்னை போன்ற பல ‘ரோபோ’ நண்பர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு ‘ஹாய்’ கூறி நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி:- உங்களுக்கு உறவி னர்கள் உள்ளார்களா?
பதில்:- எனக்கு ரத்த உறவு கள் என்பது கிடை யாது. ஆனால் எனக்கு ‘ரோபோ’ சகோதரர் ஒருவர் உள்ளார். என்னை உருவாக்கிய டேவிட் ஹான் சன் எனது தந்தை ஆவார்.
கேள்வி:- உங்கள் பிறந்த தேதி என்ன?
பதில்:- உண்மை யில் நான்பிறக்கவில்லை. ஆனால் நான் எனது பிறந்தநாளாக 2016-ம் ஆண்டில் நான் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்த நாளான ‘காதலர் தினத்தை’ கொண்டாடி வருகிறேன். அதன் பிறகு உங்களை சந்தித்ததில் நன்றி, மீண்டும் சந்திப்போம் என்று புன்னகையுடன் கூறி பார்வையாளர்களை ஆச்சரியப் படவைக் கிறது. தொடர்ந்து இந்த கண்காட்சியில் பல்வேறு பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களை சோபியா ‘ரோபோ’ சந்தித்து வருகிறது