அப்பிளின் புதிய அறிமுகங்கள் இவைதான்ஸ
20 Sep,2018
பல இலட்சக்கணக்கான அப்பிள் பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ப அப்பிள் நிறுவனத்தின்
Apple’s September 2018 நிகழ்வு(செப்டம்பர் 12) அன்று கலிபோர்னியா நகரத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த அந் நிகழ்வில் வழமைபோன்று இம் முறையும் மேம்பட்ட பல வசதிகளைக் கொண்ட தம் படைப்புக்களைப் பற்றி அறிவித்து அப்பிள் பயனாளர்களை சந்தோசப் பெருவெள்ளத்தில் மூழ்கடித்திருக்கின்றது அப்பிள் நிறுவனம்.
குறிப்பிட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்ட படைப்புக்கள்:
iPhone XS Max
o iPhone XS
o iPhone XR
o Apple Watch Series 4
o iOS 12
o MacOS Mojave
· XS and XS Max
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போன்று புதிய படைப்புக்கள் XS என்றே பெயரிடப்பட்டுள்ளன. அத்தோடு XS Max எனும் புதிய தொலைபேசி பற்றிய அறிவிப்பும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் xs ஆனது 5.8-inch Super Retina OLED display உடனும் Max ஆனது 6.5-inch Super Retina OLED display உடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு வகைத் தொலைபேசிகளும் IP68 waterproof rating எனும் தொழில்நுடபத்தில் தயாரிக்கப்பட்டுள்ளமை முன்னைய படைப்புக்களை விட கூடுதலான சிறப்பம்சமாகும்.
அத்துடன் 512ஜீபி வரை மேம்படுத்தல் வசதிகளைக் கொண்ட A12 Bionic chip பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முற்பக்க கெமரா 7m P இனைக் கொண்டதும் பிற்பக்க கெமரா 12mP இனைக் கொண்டதுமாகும் (இரட்டைக் கெமரா).
பிற்பக்க கெமராவில் புதியSmart HDR sensor பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்action shots களிலும் blurry தன்மை அற்ற புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முடியும். புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் கூட புகைப்படங்களின் depth of field மாற்றி அமைக்கக் கூடியதாக இருப்பதும் இக் கெமரா தொழில்நுட்பத்தின் கூடுதல் வசதியாகும்.
மேலும்; இரண்டு சிம்கள் பயன்படு;த்தும் வசதியும் இத் தொலைபேசிகளில் அறிமுகப்படடுத்தியுள்ளமை தொழில்நுட்ப உலகத்தை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பத்து வருடங்களாக தொலைபேசிகள் வெளியிட்டுவரும் அப்பிள் நிறுவனம் இந்தமுறைதான் இரண்டு சிம்கள் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது.
இலங்கைப் பெறுமதிப் படி xs 64gb ஆனது 160000 ரூபாவாகவும்(999 அமெரிக்க டொலர்); XS Max ஆனது 180 000 ரூபாவாகவும் (1099 அமெரிக்க டொலர்) மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ம் திகதி முதல் அனைத்து நாடுகளில் குறித்த தொலைபேசிப் பதிப்புக்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
XR
இவ் வகைத் தொலைபேசியும் XS மற்றும் XS Max வசதிகளையே கொண்டிருந்தாலும் 6.1-inch LCD display இனைக் கொண்டமைக்கப்பட்டுள்ளது.
“Liquid Retina’ என அழைக்கப்படும் விசேட தொழில்நுட்பமும் இதில் பாவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இருந்தும் இரட்டைக் கெமரா தொழில்நுட்பம் இவ்வகையில் இல்லை. ஐபோன் 8 இனை ஒத்ததாகவும், அதிலும் மேம்பட்ட படைப்பாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேபார் மாதமளவிலேயே சந்தைக்கு வரவுள்ள இத்தொலைபேசியின் 64ஜீபி வகையின் ஆரம்ப விலையாக 120000 ரூபாய் (749 அமெரிக்க டொலர்) மதிப்பிடப்பட்டுள்ளது.
Apple Watch Series 4
S4 Chip இனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அப்பிள் கடிகாரம் 4 மொடலானது, முன்னைய பதிப்புக்களைக் காட்டிலும் பெரிய திரை, ouder speaker, slimmer body போன்ற மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதயத்துடிப்பை அளந்து கொள்ளும் கூடுதல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பயனாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவும் XS – Xs Mac உடன் செப்டம்பர் 14 இல் சந்தைக்கு வரவுள்ளதுடன் ஆரம்ப விலையாக சிம் பயன்படுத்த முடியாத வகைக் கடிகாரங்கள் 72000 ரூபாவாகவும், சிம் பயன்படுத்தும் வசதியினைக் கொண்ட வகைக் கடிகாரங்கள் 80000 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அத்தனைவகைப் படைப்புக்களிலும் ECG இனை அளந்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் iOS 12 அப்டேட்டினை செப்டம்பர் 17ம் திகதி முதலும் macOS அப்டேட்டினை செப்டம்பர் 24ம் திகதி முதலும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனின் பத்தாவது பதிப்பான macOS வகையானது ஒரு வருடகாலத்திற்குள் 63மில்லியன் பிரதிகளை வித்துத் தீர்த்து இருப்பதாக ஒரு சில உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன.
இருந்தும் சந்தையில் விற்பனை அடிப்படையிலான தரப்படுத்தலில் சம்சுங் மற்றும் ஹூவாயி நிறுவனங்களுடன் பலத்தபோட்டிகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய படைப்புக்கள் போட்டியை வெகுவாக குறைத்து மீண்டும் அப்பிள் நிறவனத்தை தரப்படுத்தலின் முதலாம் இடத்தில் நிறுத்தும் என்பதே அனைவரினதும் பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.