தவறாக மெயில் அனுப்பிவிடீர்களா; இனி கவலைய விடுங்க – வருகிறது GMail-ன் புதிய வசதி
                  
                     26 Aug,2018
                  
                  
                      
					  
                     
						
	 
	இன்றைய இணைய காலகட்டத்தில் நமது வாழ்வின் அத்தியாவசிய தேவையாக இருப்பது ஈமெயில் வசதி. இந்த சேவையை மிகப்பெரிய அளவில் இலவசமாக தருவதில் முதன்மையாக இருப்பது கூகுளின் GMail-
	இணைய உலகில் ஏற்பட்டுள்ள போட்டிகளை சமாளிக்க ஒரே சேவையை வழங்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பயனர்களுக்கு புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
	இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. ஜிமெயில் சேவையை வழங்கி வருவதுடன் மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் இயங்குதளத்தினையும் 
	கூகிள் அறிமுகம் செய்துள்ளது.
	இதனால் குறித்த இயங்குதளத்தினைக் கொண்ட சாதனங்களில் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
	Undo எனப்படும் இவ்வசதியின் மூலம் அனுப்பிய மின்னஞ்சல்களை மீளப்பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் இவ்வசதி அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் ஏதாவது பிழைகள் இருப்பின் பெரும் உதவியாக இருக்கும்.
	அன்ரோயிட் இயங்குதளத்திற்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனின் 8.5.20 பதிப்பில் இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். இனி தவறாக மெயில் அனுப்புவதை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.