மீண்டும் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்
23 Jul,2018
சில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தினை வாங்கிய மைக்ரோசொப்ட் நிறுவனம் அதே பெயரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்தது.
அதன் பின்னர் மைக்ரோசொப்ட் எனும் தனது சொந்தப் பெயரில் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்தது.
எனினும் இக் கைப்பேசிகளுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைத்திருக்கவில்லை.
இதனால் கைப்பேசி வடிவமைப்பினை நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் நோக்கியா நிறுவனம் அன்ட்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றிற்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மைக்ரோசொப்ட் நிறுவனமும் அன்ரோயிட் கைப்பேசிகளை வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.