டிரைவர் இல்லாமல் இயங்கும் பஸ்
22 Jul,2018
சீனாவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்று சீனா. அதிவேக புல்லட் ரயில், பறக்கும் ரயில், தண்ட
வாளம் இல்லாமல் சாலையில் இயங்கும் ரயில், ஹைபர்லுாப் தொழில்நுட்பம், உலகின் நீளமான கடல் பாலம், நீளமான ரயில்வே மேம்பாலம், இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் என பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உலகின் முன்னோடி நாடாக திகழ்கிறது.
அந்த வகையில் தற்போது, சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம், டிரைவர் இல்லாமல் இயங்கும் 'மினி பஸ்' தொழில்நுட்பத்தை வடிவமைத்து உள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் சோதனை முறையில் தானியங்கி கார்கள் இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில் சீனாவின் 'இன்டர்நெட் ஜியன்ட் பைடு' என்ற நிறுவனம் தானியங்கி பஸ்களை வடிவமைத்து உள்ளது.
சுற்றுலா தளம் மற்றும் விமான நிலையங்களுக்கு இந்த பஸ் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக நுாறு பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனா தவிர ஜப்பானுக்கும் இவ்வகை பஸ், ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில், மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
என்ன வசதிகள்
ஸ்டீயரிங் வீல், டிரைவர் சீட், ஆக்சிலேட்டர், பிரேக் என ஒரு சாதாரண பஸ்சில் இருக்கும் வசதி இதில் இருக்காது. முழுவதும் கம்ப்யூட்டர் புரோகிராமின் படி பஸ் இயங்கும். இதில் பயணிகள் அமர்வதற்கு எட்டு சீட்கள் இருக்கும். தவிர ஆறு பேர் நின்று கொண்டு பயணிக்கலாம். சாதாரண பஸ்சின் அளவில், மூன்றில் ஒரு பங்கு இருக்கும். முதல்கட்டமாக பீஜிங், குவாங்சு,சென்ஷென் போன்ற முக்கிய மாநகரங்களில் இயக்கப்பட உள்ளது.
இந்த பஸ் இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தால் 100 கி.மீ., துாரம் வரை செல்லும் திறன் பெற்றது. மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் செல்லும்.
இந்த பஸ்சில் 14 பயணிகள் பயணம் செல்லலாம்.