ஆழ்கடலில் ஐபோன் நோட்டிஃபிகேஷன்: ஸ்கூபா டைவரின் வியப்பான அனுபவம்!
                  
                     22 Jul,2018
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	ஆப்பிள் ஐபோனின் தரம் உலகம் அறிந்த ஒன்று. ஆப்பிள் ஐபோன் வெளியாவதற்கு முன் இவை பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்பு அம்சங்களிலும் ஐபோன் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
	 
	அந்த வகையில் ஸ்கூபா டைவரின் ஐபோன் அனுபவம் விபப்பை அளித்துள்ளது. கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இங்கிலாந்து சென்றிருந்த போது, கடலில் படகு சவாரி செய்த போது அவரது ஐபோன் 7 ஸ்மார்ட்போன் கடலில் விழுந்து விட்டது. 
	 
	கடலில் விழுந்தது எப்படி எடுப்பது என தெரியாமல், அவர் கனடாவிற்கு சென்றுவிட்டார். இதே கடற்பகுதிக்கு இரண்டு நாட்கள் கழித்து ஸ்கூபா டைவின் சென்று ஆழ்கடலில் ஏதோ மின்விளக்கு மிளிர்வதை கண்டார். 
	 
	அதன் அருகில் சென்று பார்த்த போது, குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன் பெற்ற ஐபோன் 7 இருந்துள்ளது. கடலில் விழுந்து இரண்டு நாட்கள் ஆன பின்னரும் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 84% சார்ஜூடன் சீராக இயங்கியதோடு, அதில் நெட்வொர்க் சீராக இருந்ததால் குறுந்தகவல் ஒன்றும் வந்திருந்தது. 
	 
	மேலும், அந்த ஐபோனை அவரது உரிமையாளரிடமே கொண்டு சேர்த்துள்ளார் அந்த ஸ்கூபா டிரைவர்.