ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் சுடலாம் - சீனா கண்டுபிடித்த அதிநவீன லேசர் துப்பாக்கி
02 Jul,2018
ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் சுடலாம் - சீனா கண்டுபிடித்த அதிநவீன லேசர் துப்பாக்கி
லேசர் ஒளிக்கதிர்களின் மூலம் எதிரியை திணறடிக்கும் அதிநவீன துப்பாக்கி ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுமார் 3 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியால் 800 மீட்டர் தூரத்தில் உள்ள எந்த பொருளையும் எளிதில் சுட்டுப் பொசுக்கி பஸ்பமாக்கி விட முடியும். ஒரு வினாடிக்குள்ளாகவே நமது இலக்கான நபர் அணிந்திருக்கும் ஆடைகளை தீப்பற்ற வைக்கும் ஆற்றல் கொண்ட இந்த லேசர் கதிர்கள், அடுத்த சில நிமிடங்களுக்குள் அவரது தசையை கரிக்கட்டையாக்கி விடும்.
அப்போது ஏற்படும் வலியும், வேதனையும் விவரிக்க இயலாததாக இருக்கும். சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பேட்டரியின் ஆற்றலுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 வினாடி இடைவெளியில் சுமார் ஆயிரம் முறை சுட முடியும். இந்திய மதிப்புக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் விலையில் விரைவில் சந்தைக்கு வரும் இந்த ZKZM-500 லேசர் துப்பாக்கி, ஜன்னல்களையும் கடந்து ஊடுருவும் சக்தி வாய்ந்தவை.
யார் எங்கிருந்து சுட்டார்கள்? என்பதை கண்டுபிடிக்க இயலாதவாறு அமானுஷ்யமான முறையில் எதிரியை தாக்குவதற்கு இதுபோன்ற லேசர் துப்பாக்கிகள் மிகச்சிறந்த ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.