வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி!
22 Jun,2018
இனி, வாட்ஸ்அப்பில் செய்யலாம் குரூப் வாய்ஸ் கால். அது மட்டுமல்ல, வீடியோ காலும்தான். மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்டேட், இப்போது வெளியாகியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் மட்டுமே இது இயங்குகிறது. இந்த அப்டேட்டை நீங்கள் பெறவேண்டும் என்றால், உங்கள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.
நீங்கள், இப்போது உங்கள் நண்பருடன் அல்லது உறவினருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறு யாரையாவது சேர்க்க வேண்டுமென்றால், உங்கள் திரையின் வலது பக்கத்தில் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் காலில் உங்களையும் சேர்த்துப் பேசலாம். ஆண்ட்ராய்டில் தற்போது பீட்டா 2.18.189 கிடைக்கிறது. விரைவில் இந்த வசதி அனைத்துப் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐ.ஓ.எஸ்ஸில் அனைத்துப் பயனாளர்களின் பயன்பாட்டுக்கும் இந்த அப்டேட் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ் டைம் செயலியில் இருப்பதுபோல அதிக எண்ணிக்கையிலான நபர்களைச் சேர்க்க முடியாது. முதற்கட்டமாக நான்கு நபர்கள் வரை மட்டுமே வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதி வாட்ஸ்அப்பில் செய்து தரப்பட்டுள்ளது