புதிய மால்வேர்ஸ உங்க மாடல் இந்தப் பட்டியலில் இருக்கிறதா?
03 Jun,2018
மொபைலோ, லேப்டாப்போஸ ஏதேனும் சிக்கல் என்றால் உடனடியாக நாம் செய்யும் ‘க்விக் ட்ரீட்மென்ட்’ ரீஸ்டார்ட்தான். கேட்ஜெட்டின் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வே
ரீஸ்டார்ட்தான். ஆனால், இந்தப் பட்டியலில் வராத ஒன்று Wifi router. 24 மணி நேரமும் நமக்காக உழைப்பது அரசியல்வாதிகள் அல்ல; இந்த ரெளட்டர்கள்தான். இவற்றை இப்போது ரீஸ்டார்ட் செய்யவேண்டியநிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது ஒரு மால்வேர்.
VPN FILTER:
VPN filter என்றொரு மால்வேர் இப்போது வேகமாகப் பரவிவருகிறது. இதைப் பல முன்னணி இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள் இதை உறுதிசெய்திருக்கின்றன. இந்த மால்வேர் நம் டேட்டாவைக் கண்காணிக்கும்; இணைய வேகத்தைக் குறைக்கும்; அதைவிட முக்கியமாக இதன்மூலம் இணையத்துடன் இணைந்திருக்கும் ஹார்டுவேர்களைப் பாதிக்கவும் செய்யும். கெயில் அளவுக்கு இல்லையென்றாலும் ராகுல் அளவுக்கு டேமேஜை ஏற்படுத்தும் ஆபத்தான மால்வேர்தான் இது.
கீழ்க்கண்ட ரெளட்டர்கள், இந்த மால்வேரால் பாதிக்கப்படலாம் என்கிறார்கள்.
Linksys E1200
Linksys E2500
Linksys WRVS4400N
Mikrotik RouterOS for Cloud Core Routers: Versions 1016, 1036, and 1072
Netgear DGN2200
Netgear R6400
Netgear R7000
Netgear R8000
Netgear WNR1000
Netgear WNR2000
QNAP TS251
QNAP TS439 Pro
TP-Link R600VPN
உங்கள் ரெளட்டர் இந்த மாடலில் ஒன்றோ இல்லையோ; ஒருமுறை உங்கள் ரெளட்டரை அணைத்து, 20 விநாடிகள் காத்திருந்து ரீஸ்டார்ட் செய்யவும். ரெளட்டருக்கு ஏதேனும் அப்டேட் வந்திருந்தால், அதைத் தவறாமல் அப்டேட் செய்யவும். அதன்பின் பிரச்னை ஏதுமில்லை என்கிறார்கள் ஆன்டி வைரஸ் நிறுவனங்கள்