சர்வதேச விண்வெளி நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் 360 டிகிரி விர்ச்சுவல்
                  
                     18 Apr,2018
                  
                  
                      
					  
                     
						
	சர்வதேச விண்வெளி நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் 360 டிகிரி விர்ச்சுவல் வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
	
	 
	அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் ஒன்றை அமைத்து உள்ளனர். இந்த விண்வெளி மையம் சரியாக பூமியில் இருந்து 418 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. 
	 
	இதற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று வருகின்றனர். சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 
	 
	இந்நிலையில், நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனமும், ஹியூமன் டெக்னாலாஜிஸ் நிறுவனமும் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை 360 டிகிரி – விர்ச்சுவல் 3டி கேமிராவைக் கொண்டு படம் பிடித்துள்ளனர்.
	 
	இது விண்வெளி ஆய்வு மையத்தில் எடுக்கப்பட்ட முதல் 360 டிகிரி வீடியோ. விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் இந்த வீடியோவை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும். 
	 
	இந்த வீடியோவை விர்ச்சுவல் ஹெட்செட் இல்லாமல் 3டி விர்ச்சுவல் ஹெட்செட் கொண்டு பார்க்க வேண்டும்.