ஆவிகள் ஏன் புகைப்படக் கருவிகளில் மட்டும் பதிவாகின்றது தெரியுமா?
                  
                     16 Apr,2018
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	பலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கெமராக்களில் ஏன் பதிவாகின்றன என்று யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
	பழைய காலத்து ப்லிம் கெமரா முதல் தற்போதைய ஸ்மார்ட்போன் கெமரா வரை இது பொதுவான ஒன்றுதான். கெமராவில் ஆவிகள் ஏன் பதிவாகின்றன என்பது குறித்து பார்க்கலாம்
	இமேஜ் அலியசிங் (image aliasing) என்பது புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கெமரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இதன் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றக்கூடும்.
	ஸ்டீரியோஸ்கோபி மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் பதிவாகுவது வழக்கமானது தான். டபுள் எக்ஸ்போஷர் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்று எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஆவிகள் மற்றும் பேய்களை உருவாக்கலாம்.
	இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லை என கூற முடியாது. ஆனால் தொழில்நுட்பங்களால் இது போன்ற அமானுஷ்யங்களை உருவாக்கவும் முடியும் என தொழில்நுட்பவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்