உலகிலேயே மிகச்சிறிய அளவிலாக கம்ப்யூட்டரை உருவாக்கி ஐ.பி.எம். நிறுவனம்
                  
                     21 Mar,2018
                  
                  
                      
					  
                     
						
	
	
	அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஐ.பி.எம். தொழில்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக புதிய கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் 1 மி.மீ. நீளமும், 1 மி.மீ. அகலமும் கொண்டது.
	
	இந்த கருவி உப்புக் கல்லை விட மிகச்சிறியது. அதன் தயாரிப்பு விலை மிகக்குறைவாகும். இந்த கம்ப்யூட்டரில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறிய ஆயிரத்திற்கும் அதிகமான டிரான்சிஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
	
	மிகச்சிறிய அளவிலான கம்ப்யூட்டரை இந்தாண்டு நடைபெறும் 'திங்க் 2018' மாநாட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஐ.பி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவில் மேற்கொண்டுள்ள பல ஆராய்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.