பெய்ஜிங் - நியூயார்க்குக்கு 2 மணிநேரத்தில் செல்லும் விமானம்..
25 Feb,2018
பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது.
இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும் என இதை வடிவமைத்த சீனஅறிவியல் அகாடமியின் குழு தெரிவித்துள்ளது.
தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13ண மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
சமீபத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது அது மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்தது.
இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். பெய்ஜிங்-நியூயார்க் செல்ல ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.