கார்களுக்கு எரி பொருளாக மாறும் பீர்
                  
                     08 Dec,2017
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரி பொருளை கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
	 
	மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும். எனவே மதுவகைகளில் நிறைய சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
	 
	மதுவகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றினாலும் அது வாகனத்துக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, பீரில் இச்சோதனையை செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது.
	 
	அதில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியது. அதிக மைலேஜீம் கொடுத்தது. எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர் எரி பொருளாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
	 
	இதில் ஒரேயொரு சிக்கல் உள்ளது. அதன்படி பீரில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றுவது மட்டும் கடினமாக உள்ளது. அதுவும் சரி செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே இனி ‘பீர்’ மூலம் இயங்கும் வாகனங்களை சாலையில் பார்க்கலாம்.