நிலநடுக்கம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கும் அதி நவீன முறைமை உருவாக்கம்
29 Oct,2017
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய பல உபகரணங்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் அவற்றின் துல்லியம் மற்றும் வேகம் என்பன தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் செயற்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இம் முறைமை தொடர்பான ஆய்வு Geophysical Review Letters எனும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் மற்றும் பொஸ்டன் பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பயனாகவே இம் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
இம் முறைமையானது எச்சரிக்கை விடுப்பது மட்டுமன்றி உயிர்களை பாதுகாக்கக்கூடிய வசதிகளையும் கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.