பேஸ்புக்கின் மற்றுமொரு அதிரடி வசதி!
                  
                     17 Oct,2017
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	இணைய உருவாக்கத்தினால் உலகமே உள்ளங் கையில் என்று ஆகிவிட்டது.ஆனால் பேஸ்புக் இன்றி இணையமே இல்லை என்பது போல் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றது
	 
	 
	 
	இவ்வாறன நிலையில் மற்றுமொரு புதிய வசதியினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.அதாவது வீட்டிலிருந்து உணவுகளை ஆர்டர் செய்து வரவழைக்கும் வசதியாகும்.இதன் காரணமாக பிரபல உணவு நிறுவனங்களின் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பேஸ்புக்கின் ஊடாகவே இனி உணவினை ஆர்டர் செய்துகொள்ள முடியும்.இவ் வசதி கடந்த வெள்ளிக்கிழமை பரீட்சார்த்தமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குறித்த வசதி விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும்.மேலும் இவ் வசதியை பயன்படுத்தி எவ்வாறு உணவுகளை ஆர்டர் செய்வது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.