இந்த ஃப்யூஷன், தன்னைச் சுற்றியுள்ள உலகை 360 டிகிரி காட்சியில் காண இரண்டு லென்ஸ்களைப் பயன்படுத்துகிறது
ஆக்ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தனது முதல் மாதிரியை அறிவித்துள்ளது.
இந்த ஃப்யூஷன் கேமிராவில், படங்களை நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், இடம் சாரந்த ஒலியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தையும் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனத்திற்கு ஒரு வெற்றிகரமான தயாரிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஏழு நிதி காலாண்டுகளில்,ஒவ்வொரு காலாண்டிலும் இந்நிறுவனம் மொத்த இழப்பை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, $ 506m (£ 376m) மொத்த பற்றாக்குறையை சந்தித்துள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் மாதம் வரையில், அதன் பண இருப்பின் மதிப்பு சுமார் $ 150 மில்லியனாக இருந்தது.
’’சிக்கல் என்னவென்றால், விற்பனை பலவீனமாக இருந்தாலும், அதன் பிராண்டை புதுப்பித்து வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுவதற்காக, அதிகப்படியான ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது," என்று நிதி சேவைகள் நிறுவனமான வெட்புஷ் செக்யூரட்டீஸின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் பச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"புதிய தயாரிப்புகள் சரியாக இயங்கவில்லையென்றால், அவர்கள் தங்கள் செலவுகளைக் குறைக்கவேண்டும். இந்த தயாரிப்பு இயங்குதல் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் இந்த தயாரிப்புகள் மூலம் அதிகமான வருவாய் ஈட்ட முடியுமா என்ற சந்தேகத்தில் நான் இருக்கிறேன். "
கோப்ரோ கடந்தகாலங்களில் ஓம்னி என்றழைக்கப்பட்ட உயர் ரக-கோளவியல் வீடியோ ரிக் என்ற அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. ஓம்னி அதன் ஆறு கேமிராக்களில் இருந்து படங்களை இணைத்துக்கொடுக்கும் வசதி கொண்டது. ஆனால், அது வாடிக்கையாளர்களுக்கு எட்டாக்கனியாக சுமார் 4,999 டாலர் விலையை கொண்டிருந்தது.
இந்நிறுவனம் ஜனவரி 2016ல் இருந்து, அதன் புதிய தயாரிப்பான கோ ப்ரோவை வெளியிடப்போவதாக கூறிக்கொண்டு இருந்தது. ஆனால், இதுவரை அதன் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை.
GoPro Fusion, அந்நிறுவனத்தின் ஸ்டாண்டர்ட் ஆக்ஷன் கேமராவை விட பெரியதாக இருந்தாலும், ஒரு பாக்கெட்டில் சுலபமாக பொருந்திவிடுகிறது.
நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும் போது, இந்த ஃப்யூஷன் கோப்ரோ, 699 டாலருக்கு விற்கப்படும். இந்த விலை, இந்நிறுவனத்தின் முக்கிய செயல்திறன் கேமராவைவிட 40% அதிக விலை கொண்டதாக இருக்கும்.
இந்த சாதனத்தில் இரண்டு லென்ஸ்கள் உள்ளன - அதன் முக்கிய பகுதியின் இரண்டு பக்கங்களிலும் அவை உள்ளன.
இதன் சிறப்பு அம்சங்கள் :
◾5.2K ரெசொலூஷனில், விநாடிக்கு 30 பிரேம்களும், 3k ரெசொலூஷனில் விநாடிக்கு 60 பிரேம்களும் கொண்ட 360 டிகிரி காட்சிகளை எடுக்க முடியும்.
◾5 மீட்டர் (16ft) ஆழம் கொண்ட தண்ணீரிலும் வேலை செய்யும்.
◾10 மொழிகளில் குரல் வழி கட்டளைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும்.
◾தனி மெக்கானிக்கல் கிம்பல் மூலம், எப்படி நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு நெருக்கமாக வரமுடியுமா அதே போல், தானியங்கி டிஜிட்டல் ஸ்டபிலைசேஷன் மூலமாகவே இந்த வசதியை பெற முடியும்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் இதை வெளியிடும்போது பல படப்பிடிப்பு முறைகள் காண்பிக்கப்பட்டன.
பயனருக்கு முன்னால் மிதக்கும் கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட காட்சியை ஏஞ்சல் காட்சி (angel view) படமாக்குகிறது.
இந்த படப்பிடிப்பு முறைகளில் ஒன்றான ஓவர்கேப்ச்சரில், உரிமையாளர் ஒரு கோளக் காட்சியை படம்பிடித்த பின்னர், இறுதி காட்சியில் என்ன முன்னோக்கு காணப்படுகிறது என்பதை கேமரா நகரும் போது மீண்டும் அந்த காணொளியைக் காண வழிசெய்கிறது.
இது, பயனர்கள் பாரம்பரியமாக காணப்படும் ஒரு கிளிப்பை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் பார்வையிலிருந்து வெளியேறும் செயல்களைத் தடுக்க முடியும்.
மற்றொரு படப்பிடிப்பு முறையான ஏன்ஜெல் வியூ மூலம் பயனர் உடலில் இருந்து ஒரு திட்டவட்டமான துருவத்தில் கேமராவை உயர்த்த முடியும். காணொளியின் இறுதி காட்சியில் அந்த துருவம் காணப்படாது. மேலும், அந்த கேமரா, அந்நபர் முன்னால் தானாகவே இழுத்துக்கொள்ளும்.
இந்த மாதிரி செயல்முறையானது, ஒரு மெய்நிகர் தலைக்கருவி அல்லது ஊடாடக்கூடிய வீடியோவில் பின்னணிக்கு அப்பால் கோள வீடியோவைப் பயன்படுத்தும் முறையை பயனர்களுக்கு விளக்குகிறது.
கோப்ரோவின் தலைமை நிர்வாகி நிக் வுட்மேன், ஃப்யூஷன் ஒரு "புரட்சிகர" தயாரிப்பு என்றும், அது "அதன் முதல் வகை" ஆகும் என்றும் கூறினார்.
ஆனால், கோளக் கேமிராக்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கார்மின் நிறுவனம் விர்ப் 60 ஐ அறிமுகப்படுத்தியது. இது கோப்ரோவில் உள்ள அதே அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், உயர் தெளிவுத்திறனுடன் கூடிய படங்களை கைப்பற்றும் வாய்ப்பையும் இது பெற்றுள்ளது
பல்வேறு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உயர்-அளவு ரெசொலூஷன் கொண்ட 360 டிகிரி காமிராக்களை விற்கின்றனர்
பிற மாற்று கருவிகள்- ரிக்கோ தேட்டா வி, நிக்கான் கீ மிஷன் மற்றும் மேட்ரிக்ஸ் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு அசாதாரண புல்லட் நேரத்தை வழங்கும் ஸ்மார்ட்ஃபோன் கூடுதல் இணைப்பான இன்ஸ்டா 360 ஒன் போன்றவை ஆகும்.
" இந்த தயாரிப்பு நன்றாக விற்பனையாகும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இந்த காலத்தில், 360 டிகிரி காட்சிகளில் நிபுணத்துவம் வாய்ந்த கேமராவை தவிர £700 செலவுசெய்து ஒரு கேமரா வாங்க எவர் இருக்கின்றனர் ?''
மென்மையான வீடியோ காட்சிகள்
கோப்ரோ அதன் கோர் ஆக்ஷன் கேமராவின் ஹீரோ 6 பிளாக் என்ற புது ஜெனரேஷன் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது - இது தனிப்பயன் செயலி என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது.
இந்த சாதனத்தின் மூலம், இப்போது ஒரு விநாடிக்கு 60 பிரேம்கள் எடுக்கக்கூடிய 4K ரெசொலூஷனலில் வீடியோவை எடுக்க முடியும். இதன் முந்தைய பதிப்பை விட , இது சிறந்த நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
கோப்ரோவின் தலைமை நிர்வாகி நிக் வுட்மேன் கூறுகையில், ஹீரோ 6 பிளாக் அதன் முந்தைய காமிராவை விட சிறந்த பட நிலைப்படுத்துதலை வழங்குகிறது என்கிறார்
கூடுதலாக, இந்நிறுவனத்தின் கர்மா டிரோனிற்கான ஒரு மென்பொருள் மேம்பாடு அறிவிக்கப்பட்டு, அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நபரை தானாக பின்பற்ற முயற்சி செய்கிறது.
டிஜிஐ இன் மேவிக் புரோ உள்ளிட்ட பல போட்டி டிரோன்கள், சில காலத்திற்கு இதே போன்ற வசதிகளை பயனர்களுக்கு வழங்கியுள்ளன.