மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் ZTE
                  
                     30 Sep,2017
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	 
	சீனா நிறுவனமான ZTE ஆனது முன்னணி இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
	 
	இந்நிறுவனம் Axon M எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
	 
	கமெராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியானது, 6.8 அங்குல அளவுடையதும், 1920 x 2160 Pixel Resolution உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
	 
	ஏனைய சிறப்பம்சங்கள் உட்பட விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
	 
	எனினும் இக் கைப்பேசியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
	 
	இதேவேளை சாம்சுங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.