உலகிலுள்ள எந்தவொரு நாட்டிற்கும் 1 மணி நேரத்தில் பயணம்
30 Sep,2017
உலகிலுள்ள எந்தவொரு நாட்டுக்கும் ஒரு மணித்தியாலத்தில் பயணம் செய்வதற்கு வசதியான ரொக்கட் ரக விமானமொன்றை அறிமுகம் செய்வதற்கு அவுஸ்திரேலியாவின் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் தயாராகி வருகின்றது. அதிநவீன ரக உபகரணங்களினால் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச பயிற்சி நெறியொன்றின் போது இந்நிறுவனம் இத்தகவலை வெளிட்டுள்ளது.
குறித்த ரொக்கட் விமானத்தில் ஒரு மணித்தியாலத்துக்கு 27 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தை பயணம் செய்ய முடியும் எனவும் லண்டனிலிருந்து டுபாயிற்கு 27 நிமிடங்களில் பயணிக்க முடியும் எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.