சூரியனை ஆராய விண்கலன் அனுப்புகிறது நாசா
28 Sep,2017
சூரியனை ஆராய அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா விண்கலன் அனுப்புகிறது. 'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலன் 2024ம் ஆண்டு சூரியனின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஏவப்படும் இந்த விண்கலன் சூரியனை 6.4 மில்லியன் கி.மீ. தூரத்துக்குள் இருந்து சுற்றும்.