ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜ்: வாட்ஸ் அப்பின் சூப்பர் அப்டேட்!
11 Sep,2017
வாட்ஸ் அப்பில் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கான வாட்ஸ் அப்பில் இரண்டு புதிய அப்டேட்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் என்ற புதிய அம்சம் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யலாம்.
வீடியோ கால் மேற்கொள்ளும் போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி, பின்னணியில் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும்.
இது PiP என அழைக்கப்படுகிறது. அதே போல டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இன்னொரு அப்டேட் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
எப்படி, புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் வாட்ஸ்அப்பில் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடுமோ அதுபோல் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.