2017 ஐபோன்: வெளியானது வீடியோ
07 Jul,2017
...........................
ஐபோன் 8-ன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளடக்கிய கேட் ஃபைல்கள் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த ஐபோன் மொபைலானது முந்தைய ஐபோன்களை விட புதிய கிளாஸ் மற்றும் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட முந்தைய ஐபோனை போன்று இந்த ஆண்டு வெளியாகும் ஐபோனில் இடம்பெறாது. அதற்கு பதிலாக பவர் பட்டன் எனும் வசதி வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வசதியுடன் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ள கமெரா அமைப்பு மற்றும் இரு கமெராக்களுக்கு இடையே பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
2017 ஐபோன் பல சிறப்பு வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது ஐபோன் 8 என அழைக்கப்படாது என்றும், அதற்கான புது பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.