பாஸ்வேர்டு இல்லாமலே யார் வேண்டுமானாலும் உங்க ஃபேஸ்புக் அக்கவுண்டை பார்க்க முடியும்!

29 May,2017
 

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
             



நீங்கள் ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும்.உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பது உங்களுக்கு் தெரியுமா? என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல. ஒருவரது ஃபேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப் பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

பேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள்தானே நாம் பகிரும் தகவல்களைப் பார்க்க முடியும்? அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் ஃபேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தத் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள். யாரோ ஒரு ஃபேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் ஃபேஸ்புக் முகவரி மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் ஃபேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்தத் தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருந்தால், அந்தத் தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என்று பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது விடியோக்கள், போட்டோ, போஸ்ட், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் ‘டேக்’ செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம்.

அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்தப் படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் ‘லைக்’செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் கமாண்ட் செய்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார், எந்தக் குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

ஃபேஸ்புக் உறுப்பினர் முகவரியைச் சமர்ப்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாகத் திரட்டப்பட்ட தகவல்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக் காட்டுகிறது. ஒவ்வொரு வகையாகத் தேர்வு செய்து ஆய்வு செய்து பார்க்கலாம்.

பொதுவாக ஃபேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன் தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். விவாதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், ஃபேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்குப் பொதுவெளியில் சிதறிக் கிடக்கின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. இதைத்தான் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையச் சேவை அம்பலப்படுத்துகிறது. ஃபேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், இந்தத் தளம் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. ஃபேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காணக்கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது, அவ்வளவே.

அதாவது இந்தத் தேடலுக்கு இந்தத் தளம் கண்டிப்பாகத் தேவை என்றில்லை. 2013-ம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகம் செய்த‌ ‘கிராஃப் சர்ச்’ தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களைத் தேட முடியும். அப்படித் தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

பெரும்பாலான சாமானியர்களுக்குத் தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிந்துணர்வு இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘யூஸர் ஃப்ரெண்ட்லி’யாக‌ இந்தச் சேவையை உருவாக்கியிருக்கிறார்கள்.
 கிராஃப் சர்ச் அறிமுகமானபோது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காகப் பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் ஃபேஸ்புக் இந்தத் தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராஃப் சர்ச் தேடலைப் பயன்படுத்தி, தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதைத்தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நீங்களும் உஷார் நீங்களும்கூட இந்தத் தளத்தில் உங்கள் ஃபேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் ஃபேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்குக் கடை பரப்பி வைக்கப்படுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகத் தகவல்கள் இல்லை எனில், நீங்கள் பிரைவசி செட்டிங்கை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள் எனத் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களைத் திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்கக் கூடியதாக இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கான பிரைவசி போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும்போது அல்லது பின்னூட்டம் அளிக்கும்போதும் கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது.

இதற்கான இணைய முகவரி:

https://www.facebook.com/help/443357099140264

இணையதள முகவரி: https://www.stalkscan.com



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies