PayPal உடன் கைகோர்க்கும் கூகுளின் Android Pay!
20 May,2017
ஒன்லைன் ஊடாக தனது உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்துகொள்வதற்காக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதியே Android Pay ஆகும்.
இவ் வசதியானது ஒவ்வொரு கட்டமாக வெவ்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த நாடுகளில் உள்ள சில வங்கிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு Android Pay வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் தற்போது பிரபல ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் நிறுவனமாக திகழும் PayPal உடன் இணைந்து செயற்படவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
PayPal ஆனது மிகவும் பாதுகாப்பு மிகுந்த ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் நிறுவனமாக திகழ்வதால் உலகளாவிய ரீதியில் மக்கள் நம்பிக்கையை வென்றுள்ளது.
இதன் காரணமாக PayPal நிறுவனத்துடன் கைகோர்க்க கூகுள் முன்வந்துள்ளது.
எனினும் இவ் வசதி முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இம் முயற்சி வரவேற்பைப் பெறும் பட்சத்தில் ஏனைய நாடுகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.