பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க.. மாணவனின் புதிய முயற்சி
19 May,2017

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இவற்றை தடுக்க வேண்டுமானால் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழாமல் இல்லை.
இந்நிலையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த சித்தார்த் என்ற 17 வயது மாணவன் மின்காலனி ஒன்றை தயார் செய்துள்ளார்.
மின் அழுத்த விளைவின் மூலம் இதை உருவாக்கியுள்ளதாக கூறும் சித்தார்த், Circuit Board மற்றும் Rechargeable Battery ஒன்றை இணைத்துள்ளார்.
ஆபத்தான சூழலில் இருக்கும் போது 0.1 ampere செலுத்துவதன் மூலம் பொலிசார் மற்றும் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.
இதை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும், தன்னுடைய தாயின் உந்துதலே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.