ஓரிடத்திலிருந்தே அனைத்து சாதனங்களையும் கட்டுப்படுத்தும் Synthetic Sensor!
18 May,2017
இன்று உலகையே ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பமாக ஸ்மார்ட் தொழில்நுட்பம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதே ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வீடுகளையும் மாற்றிக்கொள்வதற்காக பல்வேறு சாதனங்கள் அறிமுகமாகிவருகின்றன.
இவற்றின் வரிசையில் Synthetic Sensor எனும் புதிய சாதனமும் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
தற்போது வடிவமைப்பில் இருக்கும் இச் சாதனத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த முடியும்.
அதாவது இச் சாதனத்தை உங்களது அறையில் பொருத்துவதன் மூலம் வீட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சாதனங்களை அறையிலிருந்தவாறே கட்டுப்படுத்த முடியும்.
இச் செயற்பாடானது இணையத்தளத்தினூடாகவே சாத்தியப்படுத்தப்படுகின்றது.
www.youtube.com/watch?v=aqbKrrru2co
பென்சில்வேனியாவிலுள்ள Carnegie Mellon பல்கலைக்கழகத்திலேயே இச் சாதனம் உருவாக்கப்பட்டு வருகின்றது.