கடல் டாக்ஸி : 12 நகரங்களில் அறிமுகமாகிறது
13 May,2017
...........................
தற்போது ஐரோப்பா மட்டுமல்ல ஆசிய நாடுகளில் கூட வீதிகளில் அதிக வாகன நெரிசல் காணப்படுகிறது. ஒரு இடத்திற்கு காரில் செல்வதற்கு உள்ளே, பெரும் பாடாகிப் போகிறது. அதிலும் ஏதவது ஒரு விபத்து நடந்துவிட்டால், நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இன் நிலையில் 2018ம் ஆண்டு முதல் கடல் வழியாக செல்லும் டாக்ஸிகளை ஒரு கம்பெனி அறிமுகப்படுத்த உள்ளது.
மிக மிக சிறிய அளவில் எரிபொருளை பாவிக்கும். மற்றும் சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து செல்லக் கூடிய இந்த 5ம் தலைமுறை டாக்ஸியை ஒரு கம்பெனி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி 12 நகரங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஒரு இடம் செல்ல நீங்கள் இந்த டாக்ஸியை பாவிக்கலாம். விலையும் குறைவு. அதிக நேரம் வாகன நெரிசலில் சிக்கவேண்டிய அவசியமும் இல்லை