Pinterest தளத்திலிருந்து நீக்கப்படும் முக்கிய வசதி: பயனர்களை பாதிக்குமா?
25 Apr,2017
இன்றைய இணைய உலகில் சமூக வலைத்தளங்கள் எங்கும் முக்கியமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வசதியாக Like Button காணப்படுகின்றது.
இவ் வசதி புகைப்படங்களை பகிரும் Pinterest தளத்திலும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வசதியினை நீக்குவதற்கு Pinterest தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கு காரணமாக Like மற்றும் Save பொத்தான்கள் தொடர்பில் பயனர்கள் குழப்பமடைகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏட்டிக்கு போட்டியாக அதிக லைக் வாங்குவது பயனர்களின் ஒரு பொழுதுபோக்காக இருக்கும் நிலையில் Pinterest தளத்தின் இச் செயற்பாடு அவர்களை பாதிப்படையச் செய்வதாகவே இருக்கும்.
இதேவேளை இதற்கான மாற்று வசதிகள் தருவது தொடர்பிலும் எவ்விதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் அடுத்து வரும் சில வாரங்களில் குறித்த வசதி நீக்கப்படும் என தெரிகிறது.