WWW இனை கண்டுபிடித்தவர் எதிர்காலத்தில் இணையத்தள போக்கு தொடர்பில் வெளியிட்டுள்ள
14 Mar,2017
WWW இனை கண்டுபிடித்தவர் எதிர்காலத்தில் இணையத்தள போக்கு தொடர்பில் வெளியிட்டுள்ள
உலகை ஒரு கிராமம் அளவிற்கு சுருக்கியுள்ள பெருமை என்றும் இணையத்தளத்திற்கே சேரும்.
எனினும் இவ் இணையத்தள கண்டுபிடிப்பின் பின்னணியில் பலர் இருக்கின்றார்கள்.
அவர்களுள் முக்கியமானவர் உலகளாவிய இணையத்தளம் (WWW - World Wide Web) என்ற பதத்தினை உருவாக்கியவராவார்.
இவர் முதன் முறையாக 1989ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி இதனைக் உருவாக்கினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் WWW உருவாக்கப்பட்டு 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் WWW இனை உருவாக்கியவரான Tim Berners-Lee தற்போதைய இணையத்தள பாவனை குறித்தும், எதிர்கால இணையத்தள பாவனை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.
அதாவது போலியான செய்திகள் இணையத்தளங்களினூடாக பரப்பப்படுவது குறித்தும், தனிநபர் தரவுகள் திருட்டுப்போவது அல்லது பாதுகாப்பதில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும், அரசியல் ரீதியான விளம்பரங்களுக்கு இணையத்தளம் பாவிக்கப்படுவது குறித்தும் அச்சம் வெளியிட்டுள்ளார்.