............
அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்ற நிகழ்வை நேரில் பார்க்க எத்தனை பேர் வந்திருந்தனர் என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், இணைய ஆய்வாளர்கள் டிரம்ப் பதவி ஏற்பு விழாதான் இணையத்தில் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்வு என்கிறார்கள்
அதிகபட்சமாக, ஒரு நொடிக்கு 8.7 டேரா பைட்கள் அளவுக்கு அந்த நேரலை காணொளி பார்க்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரலையில் காணொளிகளை பார்ப்பது பிரபலமடைந்து வருகிறது என்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
தென் கொரியாவில் உள்ள இணைய விளையாட்டு பிரியர்கள் இறுதியாக கடந்த ஆண்டு உலகில் பிரபலமான போக்கிமோன் கோ விளையாட்டை விளையாட முடிந்தது.
தென் கொரியாவில் கூகுள் வரைபடத்தை பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக தான் இந்த விளையாட்டின் வெளியீடு தாமதமானது என்று நம்பப்படுகிறது. தென் கொரியாவில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் வரைபட பயன்பாடு அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
விளையாட்டை தயாரித்தவர்கள் இந்த பிரச்சனையை எப்படி தீர்த்தார்கள் என்பதை முழுமையாக தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் பொது வெளியில் உள்ள தரவுகளை பயன்படுத்தி அரசு கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட செயல்பாட்டு இடைவெளிகளை நிரப்பினர் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.
செயற்கை அறிவை பயன்படுத்தி புகைப்படங்களை கொண்டு தோல் புற்றுநோயை பயிற்சி பெற்ற மருத்துவர்களை போல,அடையாளம் காண முடியும் என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு, கூகுள் தயாரித்துள்ள ஒரு மென்பொருளில் இருந்து பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை அறிவானது பூனைகளின் படங்களில் இருந்து நாய்களின் படங்களை வித்தியாசப்படுத்தி அடையாளம் காண முடிகிறது.
அதற்கு பிறகு, செயற்கை அறிவு கருவிக்கு, பெரும்பாலும் அறியப்பட்ட தோல் புற்றுநோய் வகைகளான கார்சினோமா மற்றும் மெலனோமா படங்கள் மற்றும் தனித்தன்மைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
செயற்கை அறிவு கருவிக்கு மேலும் பயிற்சி தேவை என்றும் ஆனால் இது சுகாதார துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். செயற்கை அறிவு மூலம் ஒரு ஸ்மார்ட்போன் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேனராக மாறும் என்கிறார்கள்.
யார் பைக் பயணத்திற்கு தயாராக உள்ளீர்கள்? 1,500கிலோமீட்டர் பயணம் சென்றால் எப்படி இருக்கும்?
டிஜிட்டல் விளையாட்டுக்களை தயாரிக்கும் ஆரோன் புசே பிரிட்டனின் நீளத்திற்கு சைக்கிள் ஓட்டினர். லாண்ட்ஸ் எண்டு முதல் ஜான் ஓ குரோட்ஸ் வரை உள்ள தொலைவை மெய்நிகர் உலகில் சைக்கிள் ஓட்டினர்.
மெய்நிகர் உலகில் சைக்கிள் பிரிட்டனில் இந்தப் பயணம் செய்த முதல் நபர் இவர் என கருதப்படுகிறது.
அவர் பொது வெளியில் கிடைக்கும் தரவுகளை கொண்டும், தனக்காக அவரே தயாரித்த ஸ்மார்ட்போன் செயலியை கொண்டும் அந்த விளையாட்டை தனக்காக வடிவமைத்தார்.