சதை உண்ணும் ஒட்டுண்ணியின் புதிய இனம் கண்டுபிடிப்பு
24 Jan,2017
சதை உண்ணும் ஒட்டுண்ணியின் புதிய இனம் கண்டுபிடிப்பு
ஒட்டுண்ணிகளில் பல வகை காணப்படுகின்ற போதிலும் இரத்தம் உஞ்சும் ஒட்டுண்ணிகள் மற்றும் சதையை உண்ணும் ஒட்டுண்ணிகள் என்பன கொடூரமானவையாகும்.
தற்போது சதை உண்ணும் ஒட்டுண்ணியின் புதிய இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய இனமானது அவுஸ்திரேலியாவிலேயே வசித்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Zelonia australiensis எனப்பெயரிடப்பட்டுள்ள இவ் ஒட்டுண்ணியினை Technology Sydney பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறித்த ஓட்டுண்ணிகளின் தாக்கம், வாழும் இடம் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.
எனினும் இவ் ஒட்டுண்ணி தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தள்ளனர்