............
விண்டோஸ் இயக்கத்திற்கென இணையத்தில் கிடைக்கின்ற இலவச வைரஸ் தடுப்பு செயலிகளை, AV Test Institute என்னும் அமைப்பு ஆய்வு செய்து, இந்த ஆண்டில் பயன்படுத்தக் கூடிய ஐந்து செயலிகளைப் பரிந்துரை செய்துள்ளது. மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது, நல்ல இணைய தளங்களைக் கூட மால்வேர் எனக் குறிக்கும் தவறை மேற்கொள்ளாமல் இருப்பது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருப்பது என முக்கியமான ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த தேர்வினை நடத்தி, முடிவுகளை இந்த ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட ஐந்து வைரஸ் எதிர்ப்பு இலவச செயலிகளை இங்கு பார்க்கலாம்.
கொமடோ ஆண்ட்டி வைரஸ்
இந்த (Comodo’s free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவை, Host Intrusion Prevention System மற்றும் auto-sandboxing technology ஆகும். இதன் மூலம் இதுவரை அறியப்படாத வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை கம்ப்யூட்டர் சந்திக்கும்போது, அவை கம்ப்யூட்டரைப் பாதிக்காத வகையில் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. அவற்றைச் சந்திக்கையில், மிக வேகமாக இந்த தொழில் நுட்பம் செயல்பட்டு, உடனடியாக, க்ளவ்ட் சேவையில் கிடைக்கும், அண்மைக் காலத்தில் காணப்பட்ட வைரஸ்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறது. ஒப்பிட்டுப் பார்த்து, சரிபார்க்கப்பட்ட பைல்களை மட்டுமே கம்ப்யூட்டரில் நுழைய அனுமதிக்கிறது. இந்த ஆண்ட்டி வைரஸ் செயலியில் தரப்பட்டுள்ள பயர்வால் பாதுகாப்பும், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த செயலி, விண்டோஸ் இயக்க முறைமையின் விண் 7/8/8,1 மற்றும் விண் 10 ஆகியவற்றில் செயல்படுகிறது. இதனைப் பெற இணைய தளத்தில் https://antivirus.comodo.com/antivirus-for-windows-10/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
இசெட் என்.ஓ.டி. 32
பல்வேறு பாதுகாப்பு வளையங்களைக் கொண்டதாக ESET NOD 32 என்ற ஆண்ட்டி வைரஸ் செயலி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். முழுமையான பாதுகாப்பினை, கொஞ்சம் கூடத் தவறு ஏற்படாமல், இது வழங்குகிறது. இதன் பல்வேறு பாதுகாப்பு அம்ச பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை. வைரஸ்களுக்கு எதிரான செயல்பாடுகளுடன் Antivirus and Antispyware, Antiphishing, Antispam, Network Attack Protection, Botnet Protection, Parental Control, Personal Firewall, Banking and payment Protection, மற்றும் Webcam Protection எனப் பலவகை பாதுகாப்பு வழிகளைப் பல பிரிவுகளாகத் தருகிறது. அந்த வகையில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மிகச் சிறந்ததாகும். இதனைப் பெற இணைய தளத்தில் https://www.eset.com/us/home/antivirus/download/ என்ற முகவரிக்குச் செல்லவும். ஒரு மாத காலம் இதனை இலவசமாக இயக்கிக் கொள்ளலாம். ஓராண்டுக்குப் பெற ரூ. 219 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பிட் டிபண்டர்
தன் ஆண்ட்டி வைரஸ் செயல்பாடுகளுக்காக, அண்மையில் தங்க விருதினைப் பெற்ற செயலி Bitdefender Antivirus. விண்டோஸ் இயக்கத்திற்கு நல்ல துணையாக இது செயல்படுகிறது. ‘Behavioral detection’ என்று சொல்லப்படும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை இது பயன்படுத்துகிறது.
இதன் மூலம், வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அறிந்து நீக்குகிறது. இதனால், வைரஸ் புரோகிராம்கள் செயல்படத் தொடங்கும் முதல் கணத்திலேயே அவை முடக்கப்படுகின்றன. இதனுடைய செயல் பிரிவுகளில் On-demand & on-access virus scanning and removal, active threat control (using an innovative technique called behavioral detection), anti-phishing, anti-fraud features ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதனைப் பெற இணையத்தில் http://www.bitdefender.com/solutions/free.html என்ற முகவரிக்குச் செல்லவும்.
பண்டா ஆண்ட்டி வைரஸ்
விண்டோஸ் இயக்கத்திற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் Panda Anti Virus. இது இயங்க, கம்ப்யூட்டரில் மிகக் குறைந்த அளவான இடமே எடுத்துக் கொள்கிறது என்பது இதன் தனிச் சிறப்பு. கம்ப்யூட்டர் இயக்கத்தினை, இதன் செயல்பாட்டிற்காகச் சிறிது கூட குறுக்கிடுவதில்லை. க்ளவ்ட் சேவையில் இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. அவ்வப்போது, சிஸ்டம் பைல்களையும், பிரவுசர்களையும் சுத்தப்படுத்தும் கூடுதல் பணியையும் இது மேற்கொள்கிறது. இதனைப் பெற இணைய தளத்தில் http://www.pandasecurity.com/india/homeusers/downloads/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
அவிரா
அவிரா ஆண்ட்டி வைரஸ் (Avira antivirus) ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கானதாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலியில், மிகச் சிறப்பாகச் செயலாற்றும் வசதிகளாக இதன் பயர்வால் பாதுகாப்பு வளையம் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு செயல்பாடு ஆகியவற்றைக் கூறலாம். குறிப்பாக சிறுவர், சிறுமியர்கள், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுகையில் கண்காணிக்க இதில் வசதி உள்ளது. https://www.avira.com/ என்ற இணைய தளத்தில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தளங்களில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில், விண்டோஸ் இயக்கத்திற்கானதை மட்டும் ஆய்வு செய்து மேலே குறிக்கப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை அல்லாது, மேலும் பல செயலிகள் கிடைக்கின்றன. வாசகர்கள் தாங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கேற்ப அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வேர்ட் டிப்ஸ்ஸரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்
ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இடத்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிடத்தில் சென்று நிற்கும். குறிப்பிட்ட இட த்தில், புதிய சொல் அமைக்கப்பட்டுவிட்டதா என நமக்குத் தெரியாது. இதனை நாம் தெரிந்து கொண்டு செயல்பட, ஒரு வழி உள்ளது.
ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும். பின்னர், கண்ட்ரோல் + எப் கீகளை அழுத்தி, நாம் தேடும் சொல்லுக்கு இணையாக சொல் உள்ள இட த்தைக் கண்டறியவும். இப்போது எஸ்கேப் கீயை அழுத்தினால், பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸ் மூடப்படும். இருப்பினும், நாம் தேடி அறியப்பட வேண்டிய சொல்லில், கர்சர் நிற்கும்.
இப்போது கண்ட்ரோல்+ வி கீகளை அழுத்தினால், கிளிப் போர்டில் உள்ள ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும்.
அடுத்து Object Browser இல், நெக்ஸ்ட் அம்புக்குறி அல்லது கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், தேடும் சொல் இருக்கும் இட த்தில் கர்சர் நிற்கும். இனி மேலே 2 மற்றும் 3ல் காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளவும்.
வேர்டில் குறிப்புகளைப் பார்க்க
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என எண்ணுவார்கள். இவர்கள், இதற்கெனக் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றலாம். ரிப்பனில், Review டேப் காணும்படி அமைக்கவும். Tracking குரூப்பில், Reviewing Pane டூல் காட்டப்படும். அதன் வலது பக்கம் காட்டப்படும், கீழ் விரி அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். அங்கு இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.
இங்கு காட்டப்படும், Reviewing Pane Vertical மற்றும் Reviewing Pane Horizontal ஆகிய இரண்டில், உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். உங்களின் தேர்வுக்கு ஏற்ப, Reviewing Pane அமைக்கப்படும். நீங்கள் விரும்பியபடி, உங்கள் குறிப்புகளில் மாற்றம் ஏற்படுத்தவும். Reviewing Pane ஐ Reviewing Pane டூலில் கிளிக் செய்வதன் மூலம் மூடவும்.
தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க
சென்ற இதழில், தாமாகவே அமையும் படுக்கைக் கோடுகள் குறித்த குறிப்பு தரப்பட்டது. சிலர் இதனை வரவேற்றும், பலர் இது தேவையற்ற ஒன்று எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வசதிகளை நீக்குவதற்கான குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் word options>proofing மெனுவிற்குச் செல்லுங்கள்.
அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.