கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த”Euro 2016” (UEFA European Championship)
15 Dec,2016
"கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த”
Euro 2016” (UEFA EuropeChampionship)
2016ல் உலகளவில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், ஒலிம்பிக்ஸ் போன்ற பரபரப்பை ஏற்படுத்திய பல முக்கிய விடயங்கள்
நடந்த போதும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியான ”Euro 2016” (UEFA European Championship) தான் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் கால்பந்து விளையாட்டு உலக மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையே இது காட்டுவதாக இணைய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நான்காம் இடத்தில் உள்ளார். அதே போல வசூல் சாதனை புரிந்த Deadpool திரைப்படம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
கூகுள் தேடலில் முதல் பத்து இடங்களை பிடித்த விடயங்கள் வருமாறு:
Euro 2016
Pokemon Go
David Bowie
Donald Trump
Prince
EU referendum
Alan Rickman
Olympics
US election
Deadpool