நொடிக்கு 20 ஜிபி இணைய வேகம்! பேஸ்புக் அதிரடி
17 Nov,2016
நொடிக்கு 20 ஜிபி இணைய வேகம்! பேஸ்புக் அதிரடி
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது.
அதாவது, ஒரு பல்பை எரிய வைக்க தேவைப்படும் மின் திறனை வைத்து 20 GB இணைய வேகத்தை அளிக்கும் ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
இது தொடர்பாக பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விடுத்துள்ள அறிக்கையில், உலக மக்கள் அனைவருக்கும் இணையம் சென்றடைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.
பேஸ்புக் மூலமாக அனைத்து மக்களும் இணைந்திருக்க எங்களால் ஆன முயற்சியாக அக்யூலா ட்ரோன்கள் மூலம் விமானங்களை நிறுவி இணைய சேவை அனைவருக்கும் வழங்க உள்ளோம்.
இணையத்தின் மூலம் மனிதன் எல்லாமே பெற முடியும். கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லா மனிதனுக்கு போய் சேர வேண்டும்.
அதை இலக்காக வைத்து தான் நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.